Saturday, June 20, 2026
28.4 C
Colombo
செய்திகள்உலகம்யுக்ரைனின் மற்றுமொரு நகரையும் கைப்பற்றியது ரஷ்யா!

யுக்ரைனின் மற்றுமொரு நகரையும் கைப்பற்றியது ரஷ்யா!

யுக்ரைனின் தென் பகுதியான கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக யுக்ரைன் அறிவித்துள்ளது.

ரஷ்யாவுக்கும் யுக்ரைனுக்கும் இடையிலான போரானது இன்று 8 ஆவது நாளாகவும் நடைபெற்று வருகிறது.

ரஷ்யாவின் ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள், யுக்ரைன் கார்கிவ் நகரில் தாக்குதல் நடத்தி வருகிறது.

யுக்ரைனின் தெற்கு நகரமான கெர்சனை ரஷ்ய படைகள் கைப்பற்றியதாக இங்கிலாந்து இராணுவ அமைச்சு நேற்று (03) தெரிவித்திருந்தது.

அதற்கமைய, குறித்த நகரின் பெரும்பகுதியை கைப்பற்றி விட்டதாக ரஷ்ய இராணுவமும் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது கெர்சன் நகரை ரஷ்யா முழுமையாக கைப்பற்றிவிட்டதாக யுக்ரைன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles