ஒரு கோடியே 86 இலட்சத்து 95 ஆயிரம் ரூபா உள்நாட்டு பணத்தையும், 4 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணத்தையும் வைத்திருந்த நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புறக்கோட்டை உள்ளிட்ட 3 இடங்களில் வைத்து, பொலிஸ் விசேட அதிரப் படையினரால் நேற்று இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புறக்கோட்டை – டெனெட் சந்தைக் கட்டடத் தொகுதி, மாளிகாவத்தை – நூரானியா சந்தி, கொழும்பு 10 முதலான இடங்களில் உள்ள 3 தங்க ஆபரண விற்பனை நிலையங்களை சோதனைக்கு உட்படுத்தியபோது, குறித்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், வெள்ளவத்தை, மருதானை மற்றும் புதுக்கடை முதலான பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.