நாளாந்த கேள்விக்கு அவசியமான அளவு பெற்றோல் மற்றும் டீசலை நாடளாவிய ரீதியில் விநியோகிக்க முடியாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்த்துடன், நாளொன்றுக்கு 3,000 மெட்ரிக் டன் டீசல், 2,600 மெட்ரிக் டன் பெற்றோல் என்ற வரையறையில் விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.