வத்தளை -ஹெந்தல – கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தாயால் தள்ளப்பட்ட 5 வயது சிறுவனை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பொலிஸார்இ கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நேற்று (15) இரவு களனி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் குறித்த சிறுவனின் தாய், பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டார்.
பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் மூத்த மகன் தெரிவித்த விடயங்கள் பின்வருமாறு:
அவர்கள் 5.20 மணி போல் வெளியே சென்றனர். அதன்போது எங்கே செல்கிறீர்கள் என்று நான் அவரிடம் வினவினேன். பதில் கூறாமல் என்னை ஏசி சென்றார். சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் கூறிய பின்னரே எமக்கு தெரியும். அம்மா சுகவீனமானவர். வீட்டை விட்டு வெளியேறும் போது தம்பியுடன், அவரது தடி மற்றும் வெள்ளை துணியொன்றை எடுத்து சென்றார்.காலை என்னையும் உடன் வருமாறு அழைத்தார். நான் தயாராகி வந்த பின் என்னை வர வேண்டாம் என கூறினார்.
அம்மா நான் சிறுவனாக இருக்கும்போது எனக்கு பனடோல் கொடுத்து கொல்ல முயன்றார். இதனால் எனது உறவினர்கள் தான் என்னை கவனித்துக் கொண்டனர். அவருக்கு தம்பி மேல் பாசம் அதிகம். ஏன் இப்படி செய்தார் என்று தெரியவில்லை.