நாட்டின் பாவனைக்காக இறக்குமதி செய்யப்படும் எத்தனோல் அளவு மற்றும் அதனை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு முறையான கட்டுப்பாடு இல்லாதமை குறித்து கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அவதானம் செலுத்தியுள்ளது.
இதன்படி, இலங்கையில் எத்தனோல் இறக்குமதி செய்வதற்கு பல்வேறு நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை தொடர்பான விபரங்களை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுபானம் உற்பத்தி தவிர்ந்த, மருந்து உள்ளிட்ட வேறு உற்பத்திகளுக்காக இறக்குமதி செய்யப்படும் எத்தனோல் உரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றா என்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.