Saturday, August 2, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டு5 வயது மகனை ஆற்றில் தள்ளிய தாய் கைது

5 வயது மகனை ஆற்றில் தள்ளிய தாய் கைது

வத்தளை -ஹெந்தல – கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை தள்ளிவிட்டு, ஆற்றில் குதித்து உயிரை துறக்க முயன்ற பெண்ணொருவரை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இப்பெண் நேற்றிரவு 7.30 அளவில் தனது மகனை தள்ளிவிட்டு, ஆற்றில் குதிக்க முற்பட்டபோது, வீதியால் பயணித்த நபரொருவர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதனையடுத்து, அவர் ஹெந்தலை காவலரணில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் வத்தளை காவல்துறையினரால் கைதுசெய்து அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஆற்றில் தள்ளிவிடப்பட்ட சிறுவனை கண்டுபிடிக்க படகுகள் மூலம் கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் தேடுதல் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles