Friday, December 26, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுவிட்ஸர்லாந்துக்கு செல்ல காத்திருப்போருக்கான அறிவிப்பு

சுவிட்ஸர்லாந்துக்கு செல்ல காத்திருப்போருக்கான அறிவிப்பு

சுவிட்ஸர்லாந்தில் 2015, மே 25க்குப் பிறகு விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டு வைத்திருக்கும் Vanuatu குடியரசின் மக்கள், இனி விசா இல்லாமல் சுவிட்ஸர்லாந்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் மாகாண புலம்பெயர்தல் செயலகத்தின் ஒருபகுதியாக செயல்படும் சுவிஸ் பெடரல் நீதி மற்றும் காவல்துறை இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Vanuatu குடியரசு, சரியாக ஒருவரது பின்னணியை ஆராயாமல் கடவுச்சீட்டு வழங்குவது தெரியவந்துள்ளது.

குறித்த கடவுச்சீட்டினை வைத்திருப்போரால் Schengen பகுதிக்குள் விசா இல்லாமல் நுழைய முடியும்.

ஆகவே, இந்த நபர்களால் Schengen பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் Vanuatu குடியரசு அதிகாரிகளை இது தொடர்பில் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles