Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிவசாய குடும்பங்களுக்கு இலவச யூரியா

விவசாய குடும்பங்களுக்கு இலவச யூரியா

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் ஒரு மூட்டை யூரியா உரத்தை இலவசமாக வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (WFO) இணங்கியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு பெரும்போக நெற்செய்கைக்காக 365 மூட்டை யூரியா உரத்தை இலவசமாக வழங்குவதற்கு இலங்கையில் உள்ள உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் (WFO) பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

இந்நாட்டு விவசாய சமூகத்தின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு தேவையான உதவிகளை வழங்கும் வகையில் எதிர்வரும் காலங்களில் விசேட திட்டங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு WFO இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles