போதியளவு டீசல் கிடைக்காவிட்டால், நாளை மறுதினம் முதல் நாடளாவிய ரீதியில் தனியார் பேருந்து சேவைகள் முழுமையாக நிறுத்தப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
டீசல் இன்மையால், இன்றைய தினம் சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் எண்ணிக்கையை 20 சதவீதமாக மட்டுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.