Friday, May 9, 2025
31 C
Colombo
செய்திகள்உலகம்யுக்ரைனுடனான மோதல்களில் ஏற்பட்ட உயிர்ச்சேத விபரங்களை வெளியிட்டது ரஷ்யா!

யுக்ரைனுடனான மோதல்களில் ஏற்பட்ட உயிர்ச்சேத விபரங்களை வெளியிட்டது ரஷ்யா!

யுக்ரைன்-ரஷ்யா இடையேயான இராணுவ தாக்குதலில் இதுவரை, யுக்ரைனில் 498 ரஷ்யப் படை வீரர்கள் உயிரிழந்ததாகவும், மேலும் 1,597 பேர் காயமடைந்ததாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்ய செய்தி சேவைகளின்படி, 2,870க்கும் மேற்பட்ட யுக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதுடன், சுமார் 3,700 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழன் அன்று யுக்ரைன் மீதான படையெடுப்பு ஆரம்பமானதிலிருந்து தமக்கு ஏற்பட்ட சேதம் குறித்த தகவலை ரஷ்யா வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும்.

இருப்பினும், இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் யுக்ரைனில் இருந்து இது குறித்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 6 நாட்களில் 6,000 ரஷ்ய துருப்பினர் கொல்லப்பட்டதாக யுக்ரைன் ஜனாதிபதி வொளோடிமிர் செலன்ஸ்கி நேற்று (03) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles