Tuesday, March 31, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை - IMF

இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை – IMF

இலங்கை முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வழங்கப்படும் கடன் மற்றும் காலம் தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் எட்டப்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் முறையில் இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக எதிர்வரும் வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, குறித்த குழு கடன் முகாமைத்துவ திட்டம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தவுள்ளது.

அத்துடன் இலங்கை அவ்வாறான கடன் திட்டத்தை தயாரித்து நிறைவுறுத்தம் வரை வழங்கப்படக் கூடிய கடன் மற்றும் காலம் தொடர்பில தீர்மானிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles