Thursday, March 20, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரசாங்கத்தினால் இலவச உணவு வழங்க முடியும் - பிரதமர்

அரசாங்கத்தினால் இலவச உணவு வழங்க முடியும் – பிரதமர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கையில் உள்ள ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

நேற்று (9) மாலை இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட பிரதமரின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி சமரதுங்க நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதிய உறுப்பினர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் பணியாளர்கள் மட்டத்திலான உடன்பாடு எட்டப்படும் என தான் நம்புவதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக உணவுப் பாதுகாப்புத் திட்டமொன்றை ஆரம்பிக்க உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 3 வேளை உணவை பெற்றுக்கொள்ள முடியாத 10% மக்களுக்கு அரசாங்கம் இலவசமாக உணவை வழங்க முடியும் என தான் நம்புவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles