தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு அத்தியாவசிய பொருட்களை தாமதமின்றி விடுவிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் நேற்று (09) காலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நவீன தொழிநுட்பத்தினூடாக வினைத்திறனான சேவையை வழங்கி இலங்கை துறைமுகத்தின் மீது சர்வதேச சமூகம் நம்பிக்கை வைக்க வேண்டுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.