Tuesday, July 15, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆண்டிறுதி வரை அரிசி தட்டுப்பாடு நிலவும் - மஹிந்த அமரவீர

ஆண்டிறுதி வரை அரிசி தட்டுப்பாடு நிலவும் – மஹிந்த அமரவீர

இந்த ஆண்டின் இறுதி வரை அரிசி தட்டுப்பாடு இருக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்து கொண்டு எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது 330,000 மெற்றிக் டன் அரிசி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே மக்கள் எவரும் அரிசி தட்டுப்பாடு தொடர்பில் வீணாக குழப்பமடைய வேண்டாம் என அவர் தெரிவித்தார்.

மக்கள் தற்போது அரிசி நெல்லை பதுக்கி வைக்கப்பார்க்கிறார்கள். ஆனால் பதுக்கி வைக்கப்படுபவை சில மாதங்களில் பழுதடைந்து விடும் என அறியாதவர்களே அவ்வாறு பதுக்கி வைக்கின்றனர்.

அத்தோடு மக்கள் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் அரிசியை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles