நாட்டில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளபோதிலும், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் தெரிவித்த விடயங்கள் பின்வருமாறு:
பாடசாலைகளின் கற்றல் செய்றபாடுகள் கடந்த காலங்களில் நடைபெறாமையால் தரம் 1- 2 மாணவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டனர்.
இன்று நாட்டில் கடுமையான பொருளாதார சிக்கல் நிலைமைக் காணப்படுகிறது. ஆனால், இதனால் மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் பாதிப்படையும் வகையில் செயற்பட முடியாது.
இதுதொடர்பாக நாம் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளோம். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் நேரம் கடந்து பாடசாலைகளுக்கு சமூகமளிக்கும்போது, சீருடை பிரச்சினைகளின்போது, மாணவர்கள் காலணிகளை அணியாதபோது சந்தர்ப்பங்களை வழங்குமாறு நாம் கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளோம்.