யூரியா உரத்தை பெற்றுக்கொள்வதற்கு இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியில் (Exim Bank) இருந்து கடன் பெறும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2022/23 பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை பெற்றுக்கொள்வதற்காக 55 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியிடம் இருந்து பெற்றுத்தருவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்திருந்தது.
குறித்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.