அமைச்சர்கள் சம்பளம் இன்றி ஓராண்டு காலம் பணியாற்றுவதாக நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான யோசனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடு எதிர்நோக்கும் பாரிய நெருக்கடியை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.