மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டதற்கும்,இந்திய உளவுத்துறையின் நலன்களால் நாட்டின் ஆட்சியை சீர்குலைப்பதற்குமான பின்னணியில் பசில் ராஜபக்ஷ செயற்பட்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னணி சோசலிஸ்ட் கட்சியின் (FSP) பொதுச் செயலாளர் குமார் குணரட்னம்இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டதன் பின்னணியில் அவரின் சகோதரரான பசில் ராஜபக்ஷ இரகசியமாக செயற்பட்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க இந்திய றோ மற்றும் அமெரிக்க சிஐஏ அமைப்பு செயற்பட்டு வந்ததாகவும், அரசாங்கத்தின் அடக்குமுறைகளை மீறி எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியில் போராட்டம் நடத்தி ஆட்சியை கைப்பற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
