அவசியமான நேரத்தில் தமது முழுமையான உதவிகளை வழங்குமாறு கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளிடம் வெளிவிகார அமைச்சர் கோரியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு நேற்று வெளிவிவகார அமைச்சில் வைத்து விளக்கமளித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் நிலைமை மற்றும் எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மற்றும் மின்வெட்டு போன்ற அழுத்தமான பிரச்சினைகளை உள்ளடக்கிய அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்களை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான நிலைமையை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளை விரிவாக எடுத்துரைத்த வெளிவிவகார அமைச்சர், தேவைப்படும் நேரத்தில் தமது முழுமையான உதவிகளை வழங்குமாறு தூதுவர்களை கேட்டுக்கொண்டார்