Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉணவுப் பற்றாக்குறைக்கு ஜனாதிபதியே பொறுப்பு - துமிந்த திஸாநாயக்க MP

உணவுப் பற்றாக்குறைக்கு ஜனாதிபதியே பொறுப்பு – துமிந்த திஸாநாயக்க MP

உணவுப் பற்றாக்குறை மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியே பொறுப்பு என்றும், ஜனாதிபதி எடுத்த தீர்மானங்களாலேயே இன்று நாடு இவ்வாறானதொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் இன்று (02) நடைபெற்ற அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உர விவகாரம் தொடர்பில் ஏனைய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எவ்வாறான கருத்துக்களைக் கூறினாலும், இறுதியாக தீர்மானம் எடுத்தது ஜனாதிபதியே எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அன்று அவரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் இன்று அமைச்சர்களும் அதிகாரிகளும் உரம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் மிகவும் பாரதூரமானது என சுட்டிக்காட்டிய போதிலும் ஜனாதிபதி அதற்கு செவிசாய்க்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles