ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலையான துமிந்த சில்வா, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிஐடியினரால் கைது செய்யப்பட்டார்.
தற்போது சிஐடியின் விசேட பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.