Thursday, July 3, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு800க்கும் அதிக கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்

800க்கும் அதிக கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்

சுங்க அதிகாரிகளின் சோதனை நடவடிக்கைகள் காரணமாக இதுவரை 800க்கும் அதிகமான கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த கொள்கலன்கள் தேங்கியுள்ளமையால், துறைமுகத்தில் பாரிய இடப்பற்றாக்குறை நிலவுகிறது.

அந்த இடங்களில் பயனுள்ள செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதுள்ளன.

சில கொள்கலன்கள் 10 வருடங்களுக்கு மேலாக துறைமுகத்தில் தேங்கியுள்ளன.

துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுங்க மற்றும் துறைமுக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதுவரை பெற்றுக்கொள்ளப்பட்ட சேவைகளுக்காக 70 மில்லியன் டொலர், கப்பல் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles