Sunday, March 29, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையர்கள் மூவர் இந்தியாவில் தஞ்சம்

இலங்கையர்கள் மூவர் இந்தியாவில் தஞ்சம்

இலங்கையில் இருந்து மேலும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் புகலிடம் கோரி தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக படகு மூலம் பயணித்த அவர்கள், இன்று காலை தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கடற்கரையை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் ஒருவர் உட்பட இரண்டு ஆண்களும், பெண் ஒருவரும் இவ்வாறு தமிழகத்திற்கு சென்றுள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் 70க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தஞ்சம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles