Monday, September 15, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் புதிய விசா திட்டம் அறிமுகம்

இலங்கையில் புதிய விசா திட்டம் அறிமுகம்

முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான நீண்டகால வதிவிட விசா திட்டமான ‘கோல்டன் பெரடைஸ் விசா’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவின் தலைமையில் இது அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த விசா மூலம் இலங்கையில் முதலீடு செய்ய, வசிக்க மற்றும் கல்வி கற்க முடியும்.

இந்நிகழ்வின் போது ​​கோல்டன் பெரடைஸ் விசா திட்டத்திற்கான இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் பந்துல ஹரிஸ்சந்திர உட்பட அவரது ஊழியர்களை பாதுகாப்பு செயலாளர் பாராட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles