முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவியான சஷி வீரவங்ச கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் மீண்டும் முன்னிலையாகியுள்ளார்.
போலி ஆவணங்களை கொண்டு, கடவுச்சீட்டை தயாரித்த குற்றச்சாட்டின் கீழ், 2 வருடகால சிறைத்தண்டனை பெற்றிருந்த அவர், நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி தமது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீடு செய்திருந்தார்.
குறித்த மேன்முறையீடு தொடர்பான பரிசீலனை நேற்று இடம்பெறவிருந்த நிலையில், அவரது பிணை கோரிக்கை மனு இன்றுவரை வரை பிற்போடப்பட்டது.