உலக வங்கியினால் கிடைத்த உதவியின் மூலம் சமுர்த்தி பயனாளர்களுக்கு நிதி உதவி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனை சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்தார்.
இதன்படி, ஒரு குடும்பத்திற்கு தலா 5,000 ரூபா – 7,500 ரூபா வரையான நிதியுதவி வழங்கப்படும்.
குறைந்த வருமானம் பெறுவோரின் வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.