உணவுப் பாதுகாப்பிற்காக விரிவான அரச மற்றும் தனியார் கூட்டுத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பல நாடுகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே உரத் தட்டுப்பாடு அல்லது வேறு எக்காரணம் கொண்டும் யால பயிர்செய்கையைக் கைவிட வேண்டாம் என அனைத்து விவசாயிகளையும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.