அட்டலுகமவில் ஆயிஷா என்ற 9 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை உறுதியாகியுள்ளது.
ஆயிஷாவின் பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் ரீதியாக துன்புறுப்படவில்லை என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமியை தாம் கடத்திய போதும், எதும் செய்யவில்லை என சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
எனினும் தாம் கடத்திச் சென்ற விடயத்தை சிறுமி வீட்டாரிடம் கூறிவிடுவார் என்ற அச்சத்தாலேயே அவரை கொலை செய்ததாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
குறித்த நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.