தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.