Wednesday, January 15, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாக்குவாதம் முற்றியதால் ஒருவர் கொலை

வாக்குவாதம் முற்றியதால் ஒருவர் கொலை

இரத்தினபுரி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி, கொடகஹாவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹபுகஸ் சமவெளி கிராமத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த நபர் கொடகஹாவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தும்மலத்தன்ன, சபுகஸ்தன்ன பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஆர்.ஈ. லசித தேசப்பிரிய என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் நடத்திய சந்தேக நபரை கொடகஹாவெல பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடகஹாவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles