தெஹிவளை, சரணங்கரா வீதியிலுள்ள கடையொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 45 வயதுடைய கடையின் உரிமையாளரே கொல்லப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த குறித்த களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.