Saturday, January 4, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை மாணவர்களுக்கு சீனாவிடமிருந்து இலவச சீருடை

இலங்கை மாணவர்களுக்கு சீனாவிடமிருந்து இலவச சீருடை

2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை பருவத்திற்கு தேவையான 100% பாடசாலை சீருடைகளை சீனாவில் இருந்து இலவசமாக பெற்றுக்கொடுத்ததன் மூலம் நாட்டுக்கு 7000 மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சீன தூதுவர் மற்றும் சீன அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து, சீன அரசாங்கம் 2025 பாடசாலை புதிய தவணைக்கு முன்னர் 4.3 மில்லியன் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து சீருடைகளையும், 825 பிரிவேனாக்களுக்கான சீருடைகளையும் இலவசமாக வழங்க உள்ளது.

அதன்படி, சீருடைத் துணிக்கான முதல் இருப்பு நவம்பர் 13ஆம் திகதியும், இரண்டாவது இருப்பு நவம்பர் 21-ஆம் திகதியும், மூன்றாவது இருப்பு டிசம்பர் 20ஆம் திகதியும் பெறப்படும்.

குறித்த சீருடைகளை ஜனவரி 20ஆம் திகதிக்கு முன் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவிக்காக சீன அரசாங்கத்திற்கும் சீன தூதுவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles