Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபரீட்சைகள் திணைக்களத்திற்கு அருகில் பதற்ற நிலை

பரீட்சைகள் திணைக்களத்திற்கு அருகில் பதற்ற நிலை

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்காக பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள், பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்யுமாறும் அவர்கள் கோருகின்றனர்.

அதன்படி, எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் சிலருக்கு, பரீட்சை திணைக்களத்திற்குள் சென்று கடிதம் ஒன்றை வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

பெற்றோர்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருவதாகவும், பொலிஸாரும் கலகத் தடுப்புப் பிரிவினரும் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் இலகுவாக எடுத்துக்கொண்டுள்ளார் எனவும் அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அந்த இடத்தில் இருந்த பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

Keep exploring...

Related Articles