Thursday, October 30, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுக்ளப் வசந்த கொலை: மேலும் ஒருவர் கைது

க்ளப் வசந்த கொலை: மேலும் ஒருவர் கைது

பிரபல வர்த்தகர் சுரேந்திர வசந்த என்றழைக்கப்படும் க்ளப் வசந்தவின் கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் மேற்கு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களில் KPI என குறிப்பிடப்பட்டிருந்ததுடன், சந்தேகநபர்களை காரில் அத்துருகிரிய கல்பொத்த பகுதிக்கு அழைத்துச் செல்ல இவர் உதவி செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பச்சை குத்தும் நிலையத்தின் உதவியாளராக பணியாற்றிய அளுத்கம, தர்கா நகரை சேர்ந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles