களுத்துறை நகரில் உள்ள வீட்டு மின் உபகரணங்கள் திருத்தும் கடையில் இன்று (16) பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
களுத்துறை மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
அத்துடன் தீப்பரவலால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் மதிப்பிடப்படவில்லை.