Thursday, March 26, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉத்தரகாண்ட் மண்சரிவில் சிக்கிய 30 பேர் பாதுகாப்பாக மீட்பு

உத்தரகாண்ட் மண்சரிவில் சிக்கிய 30 பேர் பாதுகாப்பாக மீட்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 30 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேற்படி 30 பேரும் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு பயணம் மேற்கொண்ட போது தவாகாட்-தானாக்பூர் நெடுஞ்சாலைக்கு அருகில் வைத்துத் திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் மலைப்பகுதியிலிருந்து கீழே வரமுடியாத நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து மண்சரிவினால் சிக்கித் தவித்த 30 பேரும் உலங்கு வானூர்தி மூலம் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles