Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

கல்கிசை -படோவிட்ட பகுதியில் நேற்றிரவு (15) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்று (15) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் படோவிட்ட நான்காம் கட்டப் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கல்கிஸ்ஸ – படோவிட்ட பகுதியைச் சேர்ந்த மதுஷான் சுவாரிஸ் என்ற 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வௌியாகவில்லை என்பதோடுஇ இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles