இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் ஜே ஷா இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டியானது, இந்திய அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலியின் 100 ஆவது டெஸ்ட் போட்டியாக அமைகின்றது.
மொஹாலியில் உள்ள பஞ்சாப் விளையாட்டு மைதானத்தில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், விராட் கோலியின் 100 ஆவது டெஸ்ட் போட்டியை நேரில் பார்வையிட, பஞ்சாப் கிரிக்கெட் சபை, ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை செயலாளர் ஜே ஷா குறிப்பிட்டுள்ளார்.