முன்பதிவு செய்யப்பட்ட ஆசனங்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இந்த கட்டண அதிகரிப்பு ஜூன் முதலாம் திகதி முதல் அமுலாகும்.
ரயில்வே திணைக்களத்துக்கு ஏற்படும் இழப்பை கட்டுப்படுத்தும் வகையில் 30% ஆல் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.
நாளொன்றுக்கு ரயில்களுக்கான எரிபொருளுக்கு சுமார் 40 மில்லியன் ரூபாவை செலவிட வேண்டியுள்ளதாகவும், நாளாந்த வருமானம் 15 மில்லியன் ரூபா மட்டும் பெறப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.