பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட அவசர சோதனையின் போது வெலே சுதாவின் சிறையில் இருந்து நவீன கையடக்கத் தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படை பூஸ்ஸ சிறைச்சாலை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (12) பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் சி பிரிவின் விசேட பிரிவின் 38ஆம் இலக்க சிறையில் அவசர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
‘வெலே சுதா’ எனப்படும் சமந்தகுமார அடைக்கப்பட்டுள்ள ‘சி’ பிரிவு செல் 38ல் சோதனை நடத்தியபோது, சிம் இல்லாத கைப்பேசி கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக கைப்பேசி சிறைச்சாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.