புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தையில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
அங்கிருந்த பேருந்து நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.