Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாழடைந்த வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்ட நபர்

பாழடைந்த வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்ட நபர்

சிங்ககம – ஹல்கந்தவல – பயாகல பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

குறித்த நபரின் சடலம் அண்மித்த தோட்டமொன்றில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றின் முன்பக்கத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.

38 வயதுடைய சுமித் வீரசிங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நேற்று (11) காலை தனது சகோதரரின் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

எனினும் அவர் மாலை வரை அவர் வீட்டிற்கு வராததால், குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுடன் சேர்ந்து அவரை தேடியுள்ளனர்.

இந்த தேடுதலின் போது, அருகில் இருந்த கைவிடப்பட்ட தோட்டத்தில் உள்ள வீட்டில் அவர் துக்கிட்டு இருந்ததை அவதானித்துள்ளனர்.

இந்நிலையில், பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

சம்பமவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles