Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிசு சடலமாக மீட்பு: தாய் வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்

சிசு சடலமாக மீட்பு: தாய் வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்

முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிசு கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்போல்ட் தோட்டப்பிரிவில் முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து கடந்த திங்கட்கிழமை (09) சிசுவொன்று சடலமாக மீட்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில், 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான முச்சக்கர வண்டி சாரதி மற்றும் 24 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த விசாரணையில் சந்தேகநபரான சாரதிக்கும் தனக்கும் இடையில் ஏற்பட்ட உறவின் காரணமாக மாவனெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பெண் குழந்தையை பெற்றெடுத்ததாக குறித்த பெண் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்இ வீட்டில் பணிபுரியும் தனது சகோதரியின் உதவியுடன் சிசுவை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு சடலத்தை மறைப்பதற்காக முச்சக்கரவண்டி சாரதியுடன் அக்கரபத்தனை பிரதேசத்திற்கு வந்ததாக சந்தேகத்திற்குரிய பெண் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles