Thursday, April 17, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

2 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

லெனதொர பிரதேசத்தில் ஒரு தொகை கஞ்சாவுடன் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

தம்புள்ளை விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் லென்தொர பிரதேசத்தில் நேற்று (11) விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த கஞ்சா கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது சட்டவிரோதமான முறையில் உலர்த்துவதற்காக தயாரிக்கப்பட்ட 02 கிலோ 650 கிராம் கஞ்சா மீட்கப்பட்டதுடன், லெனதொர பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles