Tuesday, May 26, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமகனை கொன்று தலைமறைவான தந்தை

மகனை கொன்று தலைமறைவான தந்தை

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொருபன பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மகன் மற்றும் மனைவியை தாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

சம்பவத்தில் அவரது மகன் உயிரிழந்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (11) காலை குடும்ப தகராறு முற்றிய நிலையில் கணவன் தனது மனைவி மற்றும் மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது மகன் உயிரிழந்துள்ளார்.

ரத்மலானை பொருபனை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலையை செய்த சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles