Wednesday, September 17, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீண்டும் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் GMOA

மீண்டும் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் GMOA

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இன்று (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் கறுப்புக்கொடி ஏற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் பிரபாத் சுகதபால தெரிவித்துள்ளார்.

கலாநிதி பாலித ராஜபக்ஷவுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையின் பின்னணியில் முன்னாள் அரசியல் அதிகார சபையின் செல்வாக்கு இருப்பதாக தமக்கு பலத்த சந்தேகம் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles