Saturday, May 23, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் மோதி பெண் ஒருவர் பலி

ரயில் மோதி பெண் ஒருவர் பலி

வவுனியா பகுதியில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயில் மோதி குறித்த பெண் நேற்று (10) உயிரிழந்துள்ளதாக ஓமந்த பொலிஸார் தெரிவித்தனர்.

புளியங்குளத்திற்கும் ஓமந்தைக்கும் இடைப்பட்ட பகுதியில், குறித்த பெண் ரயில் பாதையில் பயணித்த போது, ​​ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.

ரயிலில் அடிபட்ட பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரது அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

எனினும் குறித்த பெண் 35-45 வயதுக்கு இடைப்பட்டவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles