ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் போது, வாக்களிக்கத் தவறிய அரச ஊழியர்களுக்கு இன்றும் நாளையும் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அவர்கள் தங்கள் பணியிடம் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில் தங்களது வாக்கை அளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.