2025ஆம் ஆண்டில் நிச்சயமாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலை கரடுபான பிரதேசத்தில் இன்று (10) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கான சம்பள ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை மற்றும் இடைக்கால அறிக்கைக்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் வரவு செலவுத் திணைக்களத்தின் அனுமதியும் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.