தனமல்வில பிரதேசத்தில் ஒருவர் தனது தந்தையை கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது.
தனமல்வில, போதாக பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய மகன் தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (10) காலை வீட்டில் இருந்த தந்தையை தடி மற்றும் சுத்தியலால் தாக்கி அவர் கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கைதான சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.